திமுக தலைமையிலான கூட்டணி வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. தெற்கிலும் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. அதிமுக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது.
டெல்டா வடக்கு தெற்கு மேற்கு மொத்தம்
அதிமுக தக்க வைத்த இடங்கள் 3 7 12 33 55
திமுகவிடமிருந்து அதிமுக கைப்பற்றிய தொகுதிகள் 1 5 6 8 20
திமுக தக்க வைத்த இடங்கள் 15 39 20 4 78
அதிமுகவிடமிருந்து திமுக கைப்பற்றிய தொகுதிகள் 22 27 20 12 81
மொத்தம் 41 78 58 57 234
பெண்களின் பங்களிப்பு குறைவு
கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் 2021 தேர்தலில் பெண்களின் பங்களிப்பு குறைந்துவிட்டது. மொத்தம் 376 பெண்கள் போட்டியிட்டனர். இவர்களில் 12 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் ஆறு பேர் திமுக, மூன்று பேர் அதிமுக, இரண்டு பேர் பாஜக, ஒருவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.
வெற்றி பெற்றவர்கள் வாக்குவித்தியாசம் ஒரு ஒப்பீடு
வாக்கு வித்தியாசம் 2021 2016
ஆயிரம் வாக்குக்கும் குறைவு 8 16
1,000 முதல் 5,000 வரை 31 37
5,000 முதல் 10,000 வரை 30 44
10,000 முதல் 20,000 வரை 51 74
20,000 முதல் 50,000 வரை 89 58
50 ஆயிரத்திற்கு மேல் 25 3
* திமுக தலைமையிலான அணியின் சராசரி வெற்றி 25,151 வாக்குகள்
* அதிமுக தலைமையிலான அணியின் சராசரி வெற்றி 18,044 வாக்குகள்
* அதிகவாக்குகள் பெற்றவர் ஆத்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.பெரியசாமி (திமுக) 1,35,571 வாக்குகள்
* மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் தியாகராயநகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டஜெ.கருணாநிதி (திமுக) 137 வாக்குகள்.