districts

img

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை, நவ.22-

அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவாகிறது தென்மேற்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3.1 கி.மீட்டர் வரை நீலும் சுழற்சி மற்றும் அதன் தாக்கத்தால் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தெற்கு தமிழ்நாடு கடல் பகுதிகள் இடையே வரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.  

ஒரே மாதத்தில் 3வது முறையாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், தமிழ்நாட்டில் நவம்பர் 24, 25, 26 ஆம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.