வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்ததிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறைக்கு எதிராக சிபிஎம், திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின் போது மனுதாரர்கள், SIR நடைமுறை தேர்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மையையும் ரகசியத்தன்மையையும் பாதிக்கக்கூடியது என வாதிட்டனர்.
இதனைப் பரிசீலித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த மனுக்களுக்குப் பதிலளிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், வருகின்ற 24ஆம் தேதிக்குள் ஆணையம் தனது பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வழக்கு நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
