india

img

நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்!

2026–27 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு, ஜனவரி 27ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை இரண்டு அமர்வுகளாக நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
முதல்கட்ட அமர்வு ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெறும். இதனைத் தொடர்ந்து, இரண்டாம் அமர்வு மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த கூட்டத்தொடரில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல், முக்கிய சட்டமசோதாக்கள் குறித்து விவாதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.