headlines

img

அரசியல் முதிர்ச்சியோடு  பேசக் கற்றுக் கொள்ளுங்கள்!

அரசியல் முதிர்ச்சியோடு  பேசக் கற்றுக் கொள்ளுங்கள்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட அவதூறுக் கருத்துகளுக்கு தில்லியில் நடைபெற்ற ‘இந்தியா’  கூட்டணியின் ஆலோ சனைக் கூட்டத்தில், சிபிஐ(எம்) மற்றும் சிபிஐ எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு எதிராக நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சூழலில், ஒரு மாநிலத்தின் இடதுசாரி அரசைப் பார்த்து ‘பாஜகவுடன் கைகோர்த்துள்ளது’ என ராகுல் காந்தி பேசியிருப்பது அரசியல் முதிர்ச்சியற்ற செயலாகும்.

ராகுல் காந்தி தனது உரையில், “என்னை அமலாக்கப்பிரிவு பல மணிநேரம் விசாரித்தது, ஆனால்  பினராயி  விஜயனை ஏன் தொடவில்லை?” எனக்கேள்வி எழுப்பி யுள்ளார். இந்தப் பேச்சைக் கண்டித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “ஊழலற்றவர்களை அதி காரக் கோழைகளால் எதுவும் செய்துவிட முடி யாது” என்று ராகுல் காந்திக்கு சுட்டிக்காட்டி யுள்ளார். மோடியின் பிடியில்  பினராயி  விஜயன் இருக்கிறார் என்ற ராகுல் காந்தியின் சிறு பிள்ளைத்தனமான கூற்றை மறுத்துள்ள அவர், மோடியால் ஒன்றும் செய்ய முடியாதவராகவே  பினராயி  விஜயனும், கேரள அமைச்சர்களும் இருக்கிறார்கள் என்பதே உண்மை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். 

இந்தியாவிலேயே ஆர்எஸ்எஸ் அமைப் பால் தலைக்கு விலை வைக்கப்பட்ட ஒரே தலை வர் பினராயி விஜயன் மட்டுமே. 2017-ல் மத்தியப் பிரதேச ஆர்எஸ்எஸ் தலைவர் குந்தன் சந்திரா வத், பினராயி  விஜயனின் தலையைக் கொண்டு  வருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று அறிவித்ததை வரலாறு மறக்கவில்லை. அத்தகைய உறுதிமிக்க தலைவரைப் பார்த்து பாஜகவுடன் தொடர்பு எனப் பேசுவது, கேரளத்தின் மதச்சார்பற்ற வரலாற்றையும், ஆர்எஸ்எஸ் தாக்குதலில் உயிர்நீத்த 200-க்கும் மேற்பட்ட இடதுசாரித் தோழர்களின் தியாகத்தையும் இழிவுபடுத்துவதாகும்.

கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் மகத் தான பல சாதனைகளைப் படைத்து களத்தில் நிற்கிறது. இதை  அரசியல் ரீதியாக எதிர்கொள் ளும் வழியைத் தேடுவதற்கு பதிலாக ராகுல் காந்தி, உறுதியான பாஜக எதிர்ப்பு சக்தியான இடதுசாரிகள் மீது சேறு பூசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய பொறுப்பற்ற பேச்சுக்கள் எதிர்க்கட்சிக் கூட்டணியின் ஒற்று மையைச் சிதைப்பதோடு, இறுதியில் பாஜக விற்கே சாதகமாக அமையும் என சிபிஐ(எம்) எம்பி ஜான் பிரிட்டாஸ் மற்றும் சிபிஐ எம்பி சந்தோஷ் குமார் ஆகியோர் எச்சரித்துள்ளது மிகச்சரியானதாகும். ராகுல் காந்தி தனது பிழையை உணர்ந்து, அரசியல் எதார்த்தத்தைப் புரிந்து செயல்பட வேண்டும்.