தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் உழவர் சந்தை அமைக்க பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னசேலத்தில் இருந்து கள்ளகுறிச்சி, சங்கராபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறை வேற்றி போக்குவரத்தை துவங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சங்க ராபுரம் வட்ட மக்கள் கோரிக்கை மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி யுள்ளது.
தமிழகத்திலேயே அதிக தென்னை உற்பத்தி உள்ள கோவை மாவட் டத்தை மையப்படுத்தி தென்னை வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் செவ்வாயன்று தமிழக தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
மகாபலிபுரத்திற்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது.