tamilnadu

img

மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாகப் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி தாமதம்

மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாகப்  நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி தாமதம்

சென்னை, டிச. 14- சென்னை மெட்ரோ ரயில் நிலையங்க ளில் முதற்கட்ட வழித்தடத்தில் உள்ள சில  நிலையங்களில் கூடுதல் நகரும் படிக்கட்டு களை (எஸ்கலேட்டர்) அமைக்கும் பணியை  சுமார் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் முடிக்கவில்லை. முதற்கட்ட வழித்தடமான 54 கி.மீ. நெட் வொர்க்கில் உள்ள அனைத்து நிலையங் களிலும் கட்டுமானத்தின்போது நகரும் படிக் கட்டுகளும், மின்தூக்கிகளும் அமைக்கப் பட்டிருந்தாலும், சில நிலையங்களில் தெரு மட்டத்திலிருந்து ரயில்நிலையத்திற்கு அல்லது அங்கிருந்து நடைமேடை பகுதிக்கு மேலே அல்லது கீழே செல்ல நகரும் படிக் கட்டுகள் இல்லாமல் இருக்கின்றன. கூடுதலாக நகரும் படிக்கட்டுகள் இல்லாத நிலையங்கள் திருமங்கலம், அண்ணா நகர் கிழக்கு, அரசு எஸ்டேட், ஆயிரம் விளக்கு, எழும்பூர், நேரு பூங்கா மற்றும் தேனாம்பேட்டை உள்ளிட்ட நிலையங்களில் கூடுதலாக நகரும் படிக்கட்டுகள் இல்லாமல் உள்ளன. பணிகள் குறித்த தகவல்: இந்த நிலையங்கள் வழியாகப் பய ணிக்கும் பயணிகள், கூடுதலாக நகரும் படிக்கட்டுகளை அமைக்க வேண்டும் என்று மெட்ரே ரயில் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, மெட்ரோ நிறவனம் கடந்த 2023 ஆம் ஆண்டின் தொட க்கத்தில் இந்தப் பிரச்சினையை ஏற்றுக் கொண்டு, கூடுதல் நகரும் படிக்கட்டுகளைக் கொள்முதல் செய்து நிறுவும் பணிகளைத் தொடங்கியது. மொத்தம் 55 நகரும் படிக் கட்டுகள் நிறுவப்பட வேண்டிய நிலையில், இதுவரை 22 மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் சிரமம்: ஆயிரம் விளக்கு ரயில் நிலையத்திற்கு நாள் தோறும் வரும் பயணிகள் மின் தூக்கியை பயன்படுத்துவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகக் கூறினார். சில சமயங்களில் பத்து நிமிடங்கள் வரை கூட காத்திருக்க நேரிட்டுள்ளது. உடல் நலப் பிரச்சினைகள் காரணமாக  பலர் படிக் கட்டுகளைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே கூடுதல் நகரும் படிக்கட்டுகளை விரைவாக நிறுவ வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார். மெட்ரோ விளக்கம்: இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், வரும் பிப்ரவரி இறுதிக்குள் பணிகளை முடிப்ப தாக உறுதியளித்தனர். “பயணிகளின் நட மாட்டம் இல்லாத நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே எங்களால் உபகரணங்களைக் கொண்டு வந்து அவற்றை நிறுவ முடியும். குறைந்த நேரமே கிடைப்பதால், நாங்கள் விரைவாகப் பணிகளை முடிக்க முயற்சி செய்து வரு கிறோம். இந்த மாத இறுதிக்குள் மேலும்  இரண்டு நகரும் படிக்கட்டுகள் நிறுவப் படும்,” என்றார்.