கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர்பாராத பின்னடைவு, எதிரிகளின் எழுச்சி அல்ல!
கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் இடது ஜன நாயக முன்னணி (எல்டிஎப்)-க்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து அரசியல் எதிரிகள் கூக்குரலிடத் தொடங்கி யுள்ளனர். எல்டிஎப்-இன் அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஆரூடம் கூறும் இவர்களின் கூற்றுக்கு, புள்ளிவிவரங்களின் பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொள்வது அவசியம். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் “எதிர்பாராத பின்னடைவு” எனத் தெரி வித்துள்ள சிபிஎம் கேரள மாநிலச் செயற்குழு, இது குறித்து ஆழமாகப் பரீசீலனை செய்து எல்டிஎப். மேலும் முன்னேறும் எனவும் தெரிவித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல்களில் எல்டிஎப் -க்குத் தோல்விதான் எனக் கூறுபவர் களுக்கு, 2010 உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைக் கட்சி நினைவுபடுத்தி யுள்ளது. 2010-ல் இதைவிட அதிகமான பின்னடைவைச் சந்தித்த எல்டிஎப், 2011 சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றது. எனவே, சுய பலவீனத்தை அடை யாளம் கண்டு களைந்து முன்னேறும் கம்யூனிஸ்டுகளின் திறனை குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. கேரளாவின் இரட்டை மதவாத அபாயம் எல்டிஎப்-இன் பின்னடைவுக்குக் கேரளாவின் தனித்துவமான சமூகச் சூழலும், இரட்டை மதவாதத்தின் அபாய மும் ஒரு முக்கியக் காரணமாகும். கேரள மக்கள் தொகையில் கணிசமான அள வில் இஸ்லாமிய மற்றும் கிறித்தவ மக்கள் உள்ளனர். இந்தச் சூழல், ஆர்எஸ்எஸ் போன்ற பெரும்பான்மை மதவாதிகளுக்கும், பாப்புலர் ஃப்ரண்ட், ஜமாயத் இஸ்லாமி போன்ற சிறுபான்மை மதவாத அமைப்புகளுக்கும் தங்களது செயல்பாடுகளை முன்னெடுக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். எப்படி கம்யூனிச அமைப்பை தனது எதிரியாக மதிப்பிடு கிறதோ, அதேபோல சிறுபான்மை மதவாதிகளும் “காவிக்கும் சிவப்புக்கும் வேறுபாடு இல்லை” என்று முழக்கமிட்டு கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். காங்கிரசின் சமரச அரசியல் கேரளாவில் உள்ள மிகப்பெரிய மதச்சார்பற்ற அமைப்பான காங்கிரஸ், எல்டிஎப்-ஐ வீழ்த்தி தான் ஆட்சியில் அமர வேண்டும் என்ற அரசியல் நிலைபாடு காரணமாக, இஸ்லாமிய மதவாத அமைப்புகளுடனும், சங் பரிவாரத் துடனும் சமரசம் செய்து கொள்ளத் தயங்குவதில்லை. ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்)-இன் தலைமையில் உள்ள காங்கிரஸ், இந்த உள்ளாட்சித் தேர்தல்களிலும் பல இடங்களில் பாஜக-வுடனும், நேரடியாக எஸ்டிபிஐ, ஜமா யத் இஸ்லாமி போன்ற மதவாத அமைப்பு களுடனும் கூட்டணி அமைத்தது. சிறுபான்மை மதவாதத்தின் பிரச்சா ரம் இஸ்லாமிய மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திய வேளையில், அந்தப் பிரச்சாரம் மறுபுறத்தில் இந்துத்துவா சக்திகளுக்குப் பலன் கொடுத்தது. இந்த இரட்டை மதவாத ஆபத்து குறித்தும், அனைத்து மதவாதங்களுக்கும் எதிராக வலுவான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார். சங் பரிவாரத்தின் சூழ்ச்சி பாஜகவும் அதற்கு வழிகாட்டும் சங் பரிவாரமும், கேரளாவில் இஸ்லாமி யர்களுக்கு எதிராகக் கிறிஸ்தவர்களின் ஒரு பிரிவினரை அணிதிரட்டுவது என்ற சூழ்ச்சியை உருவாக்கியுள்ளனர். லவ் ஜிகாத் என்பதைக் கிறித்தவ - இஸ்லாமிய முரண்பாடுகளாக உரு வகப்படுத்த சங் பரிவாரம் முயல்கிறது. இந்த நடவடிக்கைகள் சில கிறித்துவப் பிரிவினரின் ஆதரவைப் பாஜக-வுக்குப் பெற்றுத் தந்துள்ளன. பாஜகவின் ஒரே நோக்கம் எல்டிஎப்-ஐ தோற்கடிப்பது தான். அதற்காக யுடிஎப் வெல்வதைக் கூட அவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில், யுடிஎப்-ஐத் தனிமைப் படுத்துவதோ அல்லது அவர்களை விலைக்கு வாங்குவதோ எளிது என அவர்கள் கருதுகின்றனர். பாஜக வெற்றி குறித்த பிம்பமும் உண்மையும் கேரளாவில் பாஜக மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாக ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதல் பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது கவலைக்குரிய ஒன்றாகும். எனினும், ஒட்டுமொத்தப் புள்ளிவிவரங்கள் பாஜகவின் கூற்றை மறுக்கின்றன. பாஜக வென்ற உள்ளாட்சி அமைப்புகள் • மாநகராட்சி: 6-ல் 1 • நகராட்சி: 87-ல் 2 • கிராம பஞ்சாயத்துக்கள்: 941-ல் 26 • பிளாக் பஞ்சாயத்து: 152-ல் 0 • மாவட்ட பஞ்சாயத்து: 14-ல் 0 அய்யப்பன் பெயரால் வலுவான பிரச்சாரம் செய்த பின்னரும் சபரிமலை உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பந்தளம் நகராட்சியில் எல்டிஎப் வென்றது. மறைக்கப்படும் எல்டிஎப் வெற்றியின் அம்சங்கள் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது என்ற பிரச்சாரம் இருக்கும் வேளையில், திரு வனந்தபுரம் மாவட்ட பஞ்சாயத்தை எல்டிஎப் கைப்பற்றியுள்ளது. அதேபோல், 4 நகராட்சிகளையும் 73 பஞ்சாயத்து அமைப்புகளில் 36-ஐயும் எல்டிஎப் வென்றது. முதல்வர் பினராயி அவர்களின் சொந்த மாவட்டமான கண்ணூரில் எல்டிஎப் தோற்றது என சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்தை எல்டிஎப் கைப் பற்றியது மட்டுமல்லாமல், தனது வலிமையையும் அதிகரித்துள்ளது. மேலும், 8 நகராட்சிகளில் 5-ஐயும், 71 கிராம பஞ்சாயத்துகளில் 48-ஐயும் எல்டிஎப் வென்றுள்ளது. ஆகவே, கண்ணூர் சிவப்பின் பக்கம்தான் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்தை எல்டிஎப். வென்றுள்ளது. இங்கு 13 பிளாக் பஞ்சாயத்துகளில் 9-ஐயும், 88 கிராம பஞ்சாயத்துகளில் 46-ஐயும், 6 நகராட்சிகளில் மூன்றையும் எல்டிஎப் கைப்பற்றியுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் களை ஒப்பிடும் பொழுது, எல்டிஎப்-இன் வாக்குகள் 8% அதிகரித்துள்ளதாகவும், யுடிஎப் 2.5% வாக்குகளையும் பாஜக சுமார் 10% வாக்குகளையும் இழந்துள்ள தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்யூனிஸ்டுகள் தமது பலவீனங்களைச் சரிசெய்து முன்னேறும் திறன் படைத்த வர்கள் என்பது கேரளாவில் மீண்டும் நிரூபிக்கப்படும் என்பது திண்ணம்.
