உரிமம் இல்லாமல் நாய் வளர்ப்பவர்களுக்கு இன்றுமுதல் அபராதம் விதிக்கப்படுமென சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
சென்னை மாநகராட்சியில் உரிமம் இல்லாமல் நாய் வளர்ப்பவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
நான்கு முறை அவகாசம் கொடுத்தும் சென்னையில் இதுவரை 57,602 நாய்களுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளது. இதனால் உரிமம் பெறாத நாய்களைக் கண்டறிய 15 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உரிமம் பெறாதவர்களுக்கு தலா 5000 அபராதம் விதிக்கப்படும் பணி இன்றுமுதல் தொடங்கியுள்ளது.
