தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம்: கூலி உழைப்பு மூலதனம் அறிமுகம்
திருப்பூர், டிச. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் நவரத் தின தலைவர்களில் ஒருவ ரும், சுதந்திரப் போராட்ட வீர ருமான தோழர் பி.ராமமூர்த் தியின் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் சிஐடியு சார்பில் கூலி உழைப்பு மூலதனம் நூல் அறிமுகம் செய்யப்பட்டது. அரசியல் வாழ்க்கையில் ஒன்பதரை ஆண்டுகள் சிறை வாழ்க்கை, 7 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. ‘தமிழ்நாடு’ தமிழ் நாடு என்ற பெயர் அடைவதற்கான முதற் கார ணமாக இருந்தவர். தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாக வும் இருக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பேசியவர். நாடாளுமன்றத்திலும், ஒன்றிய நிர் வாகத்திலும் தேசிய மொழிகளின் சமத்து வம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று 1968 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உரை யாற்றிய மகத்தான தோழர் பி.ராமமூர்த்தி யின் நினைவு தினம் திருப்பூரில் திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. செங்கொடியை சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து சிஐடியு மாநிலச் செயலாளர் டி.குமார் கூலி உழைப்பு மூலதனம் நூலை அறிமுகம் செய்து வைத்தார்.சிஐடியு நிர்வாகி கள் பி.பாலன், ஒய்.அன்பு உட்பட திரளான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
