பாலின சமத்துவம் சிறப்பு கருத்தரங்கு
திருப்பூரில், டிச.15- பாலின சமத்துவத்தின் மூலம் தனிமனித வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி ஏற்படும் என பாலின சமத்துவம் சிறப்பு கருத்த ரங்கில் பிசப்’ஸ் நர்சிங் கல்லூரி பொறுப்பு முதல்வர் லெட்சுமிப்பிரியா தெரிவித்தார். திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல் லூரி பாலின உளவியல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில் ‘பாலின சமத்துவம்’ பற்றிய சிறப்பு உரையாடல் நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல் துறை தலைவர் அமிர்த ராணி வரவேற்றார். பேராசிரியர் விநாயகமூர்த்தி வாழ்த்தி பேசினார். தாராபுரம் பிசப்’ஸ் நர்சிங் கல்லூரி பொறுப்பு முதல்வர் லெட்சு மிப்பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து பேசு கையில், பாலியல் வன்கொடுமை மற்றும் கொத்தடிமை ஒழிய பாலின சமத்துவம் பற்றிய புரிதல் அவசியம். பாலின சமத்து வத்தின் மூலம் தனிமனித வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி ஏற்படுவதோடு, நம் நாடும் வளர்ந்த நாடாக மாறும் என் றார். இதைதொடர்ந்து பாலின சமத்துவம் குறித்த உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதை யடுத்து கல்லூரியின் அகப்புகார் குழுவின் மூலம் இளம் பெண்கள் எதிர்கொள்ளும் பாலி யல் துன்புறுத்தல்கள் மற்றும் சவால்கள் குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் பாலா மணி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் நாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித் தும், நாய்களுக்கு உணவளிப்பதைத் தவிர்க்குமாறும் உடற்கல்வி இயக்குனர் ராஜாராம் எடுத்துரைத்தார். உறுப்பினர்கள் நூலகர் சித்ரா தவப்புதல்வி பெனாசிர், பர்வின்பானு, சுதா, மீனாட்சி, சத்யா, சுமதி, செல்வத்தரங்கினி உள்ளிட்ட ஏராளமான பேராசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
