மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு கண்டனம்
திருப்பூர், டிச.15- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்ற கண்டனம் தெரிவித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியாவின் ஊரக பகுதிகளில் உள்ள விவசாய தொழி லாளர்கள், கிராம தொழிலாளர்கள் வேலை உத்திரவாதம் பெறும் வகையில் 2005 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் நிறைவேற் றப்பட்டது. இதில் தொழிலாளர்கள் 100 நாள் வேலை பெறுவது சட்டபூர்வ உரிமையாக வழங்கப்பட்டது. இத்திட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. 20 ஆண்டுகளாக நடைமுறை யில் உள்ள இந்த திட்டத்தின் பெயரை தற்போது ஒன்றிய அரசு சாது பூஜ்ய பாபு கிராமின் ரோஜகர் யோஜனா என பெயர் மாற் றம் செய்யப்படவுள்ளதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி யினர் மற்றும் விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில், திருப்பூர் ஊத்துக்குளி சாலை கொங்கு மெயின் ரோடு ரயில்வே கேட் அருகில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் பூங்கொடி தலைமையில் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
புகையிலைப் பொருட்கள் விற்பனை இருவர் கைது
திருப்பூர், டிச.15- பல்லடம், மாணிக்காபுரம் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் ஞாயிற்றுக்கிழமை காவ்லர்கள் சோதனை மேற் கொண்டனர். அப்போது, அங்கு 24 கிலோ புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரான பெரு மாள் (46) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த புகையி லைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர். இதேபோல, மங்கலத்தை அடுத்த கிடாதுறைபுதூர் பகுதியில் புகையி லைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட மளிகைக் கடை உரிமையாளரான ராம் (29) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 595 கிராம் புகையிலைப் பொருள்களை பறி முதல் செய்தனர்.
