tamilnadu

img

திடக்கழிவு மேலாண்மை பணிக்கு பொறுப்பு அலுவலர் நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவிப்பு

திடக்கழிவு மேலாண்மை பணிக்கு பொறுப்பு அலுவலர் நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவிப்பு

திருப்பூர், டிச.15- திருப்பூர் மாநகராட்சியில் 60  வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக பொறுப்பு  அலுவலர் நியமிக்கப்பட உள்ளதாக  நகராட்சி நிர்வாக துறையின் இயக்கு னர் மதுசூதன்  தெரிவித்துள்ளார். திருப்பூர் மாநகராட்சிக்கு  உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்ப டும் குப்பைகள் பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அருகாமையில் வசிக்கும் கிராம மக்கள் எதிர்ப்பு  தெரிவித்து நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை யடுத்து பாறைக்குழிகளில் குப்பை கொட்டப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் மாநகரப்பகுதிகளில் ஆங் காங்கே மலைபோல் குப்பை தேங்கி யுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு நகராட்சித்துறையின் நிர்வாக இயக் குனர் மதுசூதன் தலைமையில் மாநக ராட்சி அலுவலகத்தில் திங்களன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற் றது. இதில், மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் அமித்,  துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்,  சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதைதொடர்ந்து நகராட்சி நிர் வாக துறையின் இயக்குனர் மதுசூ தன் செய்தியாளர்களிடம் கூறுகை யில், திருப்பூர் மாநகராட்சியில் 60  வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக பொறுப்பு அலுவலர் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் தினந்தோறும் காலை வேளைகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து இப்பணிகளை கண்கானிப்பர்.  மக்கும்  குப்பை, மக்காத குப்பையை வீடுகளிலேயே பிரித்து பெறுவதும், இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள் வார்கள். அடுத்த 15 நாட்களுக்குள் இந்த இலக்கை முழுமையாக அடை யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. மொத்த குப்பைகள் வெளியேற் றும் ஹோட்டல், பனியன் நிறுவ னங்கள்,  வணிக நிறுவனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள்  ஒன்றோடொன்று கலக்காதவாறு மறுசுழற்சி மையங்களுக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் மேற் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வீடுகளிலேயே திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்வதற்கான முறையை மேற்கொள்ள மக்கள் முன்  வர வேண்டும். இதை, விரிவுபடுத்த  ரூ.7.5 கோடி அனுமதி வழங்கப்பட் டுள்ளது. இதில் பல்வேறு பகுதிக ளில் குப்பைகளுக்கு  தீ வைப்பது, மொத்த குப்பைகளை நிறுவனங்கள் கொட்டி செல்வது உள்ளிட்டவை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். பையோ சிஎன்ஜி  மையத்திற்கான  15-20 நாட்களில் தொடங்கப்பட்டு 6 மாதத்திற்குள் முடிக்கக்கப்படும். வீடுகளில் குப்பை கள் பிரித்து வழங்க தொட்டிகள் வழங்கப்படும். எம்சிசி மையங்கள் மூலம் தினசரி 140 டன் வரை குப்பை கள் பிரிக்கப்படுகிறது. காலியிடங்க ளில் திறந்த மையத்தில் குப்பைகளை  பிரிக்க சிமெண்ட் தளம் அமைக்கப்ப டுகிறது. முழுவதுமாக இங்கேயே மேலாண்மை செய்ய முடியும் என தெரிவித்தார்.