states

img

உ.பி: மக்களை அச்சுறுத்திய ஓநாயை சுட்டுக்கொன்ற வனத்துறை!

உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய பெண் ஓநாயை வனத்துறை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் தற்போது வரை, ஓநாய் தாக்கி 10 குழந்தைகள், இரு முதியவர்கள் என மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்; 32 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சூழலில், கடந்த 13-ஆம் தேதி அன்று ஆண் ஓநாய் ஒன்றை வனத்துறை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். இதனை தொடர்ந்து, நேற்று ஆண் ஓநாயுடன் இருந்த பெண் ஓநாயையும் வனத்துறை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.