world

img

ஆஸ்திரேலிய துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சிட்னி நகரில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நேற்று மாலை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போண்டி கடற்கரையில் யூதர்களின் விழாவான ஹனுக்கா கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.
அப்பொது அங்கு வந்த 2 பேர் திடீரென மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். தற்போது தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் 50 வயது மதிக்கத்தக்க நபர் கொல்லப்பட்டார். காயமடைந்த இளம் வயது நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் தந்தை-மகன் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை தற்போது வெளியிட முடியாது எனவும் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் நியூ சௌத் வேல்ஸ் காவல் ஆணையர் லேன்யன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.