உலக சுகாதார நிறுவனத்திற்கு பெரும் சவால்
2025 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்புக்கு பெரும் சவால்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது என அவ்வமைப்பின் இயக்குநர் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். போர்கள் நடக்கும் பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன எனவும் அவர் கவலை தெரிவித்தார். இந்த ஆண்டு மட்டும் 18 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சுகாதாரப் பணியாளர்கள் மீது 1,272 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால் கிட்டத்தட்ட 2,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
புடின்-மதுரோ தொலைபேசி உரையாடல்
ரஷ்ய ஜனாதிபதி புடின் வெனிசுலா ஜனாதி பதி மதுரோவுடன் தொலைபேசியில் உரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் வெனிசுலாவின் தற்போதைய நிலைமை குறித்து அவர்கள் விவாதித்ததாக ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. வெனிசுலா மீது அமெரிக்காவின் மிரட்டல் கள் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டிற்கு மீண்டும் தனது ஆதரவை ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் இரு நாடுகளும் அனைத்து முக்கியத் துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை அதி கப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன.
இனப்படுகொலைக்கு உதவும் மைக்ரோசாஃப்ட்டுக்கு நோட்டீஸ்
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சட்ட நட வடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறது. இஸ்ரேல் செய்து வருவது இனப்படுகொலை தான் என அறிந்தே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகிய வற்றுக்குத் துணை நிற்கும் மைக்ரோசாஃப்ட் மீது சட்ட மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கம்போடியா-தாய்லாந்து தொடரும் மோதல்
கம்போடியாவின் மீதான தாக்குதல்கள் தொடரும் என தாய்லாந்து பிரதமர் அறி வித்துள்ளார். தாய்லாந்துக்கும் கம்போடி யாவுக்கும் இடையே போரை நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்பு இருந்த போதிலும் “எங்கள் நாட்டிற்கும் மக்களுக்கும் எந்த ஆபத்தும், அச்சுறுத்தலும் இல்லை என்று நாங்கள் உணரும் வரை, தாய்லாந்து தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடரும் என தாய் லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் தெரி வித்துள்ளார்.
பெருமழை வெள்ளம் : வாஷிங்டனில் அவசரநிலை
அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால் வாஷிங்டன் னில் தொடர் கனமழை வெள்ளம் ஏற்பட்ட நிலையில் அங்கு அவசரநிலை அறிவிக்கப் பட்டுள்ளது. 78,000க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. இதேபோல் அமெரிக்கா-கனடா எல்லைக்கு அருகில் வடக்கில் உள்ள சுமாஸ், நூக்சாக் மற்றும் எவர் சன் நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
