இந்தியாவுக்கு எதிரான 50% வரியை நீக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் தீர்மானத்தை கொண்டுவந்தனர்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் அமலானது. ஜவுளி, ஆடைகள், இறால், தோல், ரசாயனங்கள் மற்றும் வாகன பாகங்கள் போன்றவை இந்த வரி உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த சூழலில், அமெரிக்க நாடாளுமன்றத்தில், நார்த் கரோலினா உறுப்பினர் டெபோரா ரோஸ், டெக்சாஸ் உறுப்பினர் மார்க் வீசி மற்றும் இல்லினாய்ஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் இந்தியாவுக்கு எதிரான 50% வரியை நீக்கக் கோரி தீர்மானத்தை கொண்டுவந்தனர். அந்த தீர்மானத்தில் இந்தியாவுக்கு எதிரான 50% வரி விதிப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என்றும், அமெரிக்க நுகர்வோருக்கே இதனால் பாதிப்பு என்றும் தெரிவித்துள்ளனர்.
