93 பேர் வசிக்கும் மாஞ்சோலையில் 1,100 பேருக்கு எஸ்ஐஆர் விண்ணப்பங்கள்
திருநெல்வேலி, டிச.13- திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மேற்கு தொடர்ச்சி மலை யில் உள்ளது. பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி சார்பில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை, காபி பயிர் செய்யப்பட்டுள்ளன. இந்தப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். குறிப்பாக இந்த வனப்பகுதி, ஆங்கிலேயர் ஆட்சியின் போது 99 ஆண்டுகள், பிபிடிசி நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த குத்தகைக்காலம் வரும் 2029ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு மாஞ்சோலை வனப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது. 93 பேர் இதற்காக அந்த தேயிலைத் தோட்டங்களில் குடும்பத்துடன் பணி புரிந்து வசித்து வந்த 4 ஆயிரம் தொழிலா ளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப் பட்டது. இடம்பெயரும் தோட்டத் தொழி லாளர்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப் பட்டு வீடுகள், நிலங்கள் வழங்கப் பட்டுள்ளன. இதனால், தொழிலா ளர்கள் பலரும் இடம் பெயர்ந்துவிட்ட நிலையில், தற்போது வெறும் 93 பேர் மட்டுமே மாஞ்சோலையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முழு வதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி ஞாயிறன்றுடன் முடிவடைகிறது. இத்தகைய சூழலில், 93 பேர் வசிக்கும் மாஞ்சோலையில் 1,100க்கும் அதிகமானோர் உள்ளதாக வாக்காளர் படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகார், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர் தல் அலுவலரின் கவனத்திற்கு தெரிய வந்தது. இதனையடுத்து அம்பாசமுத்தி ரம் தொகுதி தேர்தல் அலுவலரும், சேரன்மகாதேவி உதவி மாவட்ட ஆட்சி யருமான ஆயுஷ் குப்தா 1,100 வாக்கா ளர்களை பதிவேற்றம் செய்த 98 முதல் 102 எண் வரை என 5 வாக்குச்சாவ டிகளின் நிலை அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குறிப்பாக ஊத்து பகுதியில் ஒருவர் கூட வசிக்க வில்லை. ஆனால், அந்த பாகத்தில் 63 பேர் வசிப்பதாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வீடு, வீடாகச் சென்று படிவங் களை வழங்கி திரும்பப்பெற வேண்டும் என்ற விதிமுறை அங்கு வசிக்காத நபர்களிடமும், தெற்கு பாப்பான்குளம், ரெட்டியார்பட்டி ஆகிய இடங்களில் அரசு வழங்கிய வீடுகளைப் பெற்று குடி பெயர்ந்தவர்களிடமும், சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களிடமும் படி வங்கள் வழங்கப்பட்டு பிஎல்ஓ செயலி யில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 7 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மழுப்பல் இதுதொடர்பாக விளக்கம் அளித் துள்ள திருநெல்வேலி மாவட்ட ஆட்சி யர் சுகுமார், அந்த பகுதியில் இருந்து வெளியேறியவர்களும் அதே இடத்தில் இருப்பதாக கூறி விண்ணப்ப படிவங்க ளை கொடுத்துள்ளதாக மழுப்பலாக தெரிவித்தார். மேலும், விரைவில் வட்டாட்சியர் அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், அப்போது அங்கு வசிக்காதவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்கள் எஸ்ஐஆர் படிவங்கள் நீக்கப்படும் என்றும் அவர் கூறினார். இடம் பெயர்ந்த வர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து தற்போதுள்ள இடத்தின் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் எனவும் அவர் விளக்கம் அளித்தார். தேர்தல் ஆணையம் சதி? எஸ்ஐஆர் என்பது உண்மையான வாக்காளர்கள் நீக்கம், போலியான வாக்காளர்களை நீக்கும் செயல்முறை ஆகும். இது ஜனநாயகத்தை ஒழிக்கும் செயல். எஸ்ஐஆர் மூலமாக தான் பாஜக அதிகாரத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது என “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் ஆதாரத்துடன் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வரும் நிலையில், 93 பேர் வசிக்கும் மாஞ்சோ லையில் 1,100 பேருக்கு எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் பதிவேற்றப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. மலைப்பகுதி என்பதால் போலி யாக வாக்காளர்களை சேர்த்தால் யாரும் கண்டறிய முடியாது என்று, குறுக்கு வழியில் வாக்குகளை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டமிட் டுள்ளதா? என்ற சந்தேகம் கிளம்பி யுள்ளது.
