games

img

விளையாட்டு

12ஆம் வகுப்பு வினாத்தாளில்  “கார்த்திகா எக்ஸ்பிரஸ்-க்கு” அங்கீகாரம்

தமிழ்நாடு அரசுக்கு கபடி ரசிகர்கள் பாராட்டு

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை - கண்ணகி நகரைச் சேர்ந்த 17 வயது கார்த்திகா, தற்போது தமி ழகத்தின் பெருமையாக மாறி உள்ளார். பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு கபடி தொடரில் துணை கேப்டன் அந்தஸ்துடன் களமிறங்கிய “கார்த்திகா  எக்ஸ்பிரஸ்” என அழைக்கப்படும் கார்த்திகா மிரட்டலான ஆட்டத்துடன் தங்கப்பதக்கம் பெற்றுக் கொடுத்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், அரசு பள்ளி வினாத்தாளில் “கார்த்திகா எக்ஸ்பிரஸ்-க்கு” தமிழ்நாடு அரசு அங்கீகாரம் அளித்துள் ளது. 12ஆம் வகுப்பு வினாத்தாளில், கார்த்திகாவின் சாதனைகளை குறிப்பிட்டு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.  அதில்,”அ) கார்த்திகா யார்? ஆ) கார்த்திகாவின் சாதனை என்ன? இ) அவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? ஈ) இந்த இளம் நட்சத்திரத்தின் ஒரே ஆதரவாளர் யார்?  உ) ‘கார்த்திகா - தமிழ்நாட்டின் பெருமை’ காரணங்கள் கொடுங்கள்” என வினாத்தாளில் கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. இத்தகைய சூழலில், 12ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவியான கார்த்திகாவின் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புகளை உள்ளடக்கிய சிறு குறிப்பினை வெளியிட்டு, வினாத்தாள் மூலம் பெருமைப்படுத்தியுள்ள தமிழ்நாடு அரசுக்கு நன்றி என கபடி உள்ளிட்ட ஒட்டு மொத்த விளையாட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்து வரு கின்றனர்.

மானாமதுரையில் தமிழ்நாடு மகளிர் அணியின் பயிற்சி முகாம்

20 வயதிற்குப்பட்ட 51ஆவது தேசிய ஜூனியர் மகளிர் கபடி போட்டி டிசம்பர் 25ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடை பெறுகிறது. கொல்கத்தா டம் டம் சிறைச்சாலை அருகே உள்ள, உள்ளரங்கு மைதானத்தில் 28ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேசிய ஜூனியர் கபடி தொட ருக்கான தமிழ்நாடு மகளிர் அணியின் பயிற்சி முகாம்  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வெள்ளியன்று தொடங்கியது. டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு அணியின் நட்சத்திர வீராங்கனை “கண்ணகி நகர்” கார்த்திகா உள்ளிட்ட வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பயிற்சி முகாமில் தேசிய ஜூனியர் மகளிர் கபடி தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகள் மற்றும் கேப்டன் பதவிக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நட்சத்திர வீராங்கனை “கணணகி நகர்” கார்த்திகா தமிழ்நாடு கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம் இருப்ப தாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆந்திராவில் ஆடவர் கபடி தொடர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள உள்ளரங்கு மைதானத்தில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 15 முதல் 18ஆம் தேதி 51ஆவது தேசிய ஜூனியர் ஆடவர் கபடி போட்டி நடைபெற உள்ளது. 20 வயதிற்குட்பட்டோர் பங்கேற்கும் இந்த தொடரில் 75 கிலோ எடை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.