திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் இந்துத்துவா மதவெறி அமைப்புகளுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம்
திருவள்ளூர், டிச. 13- திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில், சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள அளவீட்டுக் கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவைப் பயன்படுத்தி, கலவரத்தைத் தூண்ட முயற்சித்த இந்து மதவெறி அமைப்புகளுக்குத் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலக் குழுக் கூட்டம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் மாநிலத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நூர்முகமது தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில், மாநிலப் பொதுச் செயலாளர் பி.செந்தில்குமார் தீர்மானங்களை முன்மொழிந்தார். மாநிலப் பொருளாளர் ஒய். இஸ்மாயில், நிர்வாகிகள் ஹாஜீ மூசா, அகமது உசேன், அலாவுதீன், கல்யாண சுந்தரம், ஆனந்தன், கார்த்தீஸ்குமார் உள்ளிட்ட மாநி லக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் ஏ.அப்சல் அகமது வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் எஸ்.எம் ஹனீப் நன்றி கூறினார். தீர்மானங்கள் முருக பக்தர் போர்வையில் ராம ரவிக்குமார் தொடுத்த வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் திட்டமிட்டு விசாரித்து, ஏற்கெனவே இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பிற்கு மாறாக அள வைக்கல்லில் ஏற்ற உத்தர விட்டு அதனை உடனடியாக அமல்படுத்த ஆணையிட்டதையும், சங்பரிவார் குண்டர்கள் கலவரத்தைத் தூண்ட முயற்சித்ததையும் கண்டிக்கிறோம். தமிழ்நாடு அரசும் காவல்துறையும் கலவர முயற்சியைத் தடுத்து நிறுத்தி யதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்டோரை வழக்கில் ஆஜராக உத்தரவிட்டு ஒன்றிய அரசைப் பயன்படுத்தி மதக் கலவரத்தை உருவாக்க சங்பரிவார் அமைப்புகள் முயற்சிப்பதாக இக்கூட்டம் கண்ட னம் தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், நீதிமன்றத் தீர்ப்பு பெரும்பான்மை இந்துக்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், சிறுபான்மையினருக்கு எதிராக வும் கருத்து தெரிவித்ததற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர் திருத்தப் பணி அவசர கதியில் நடப்பதால் சிறுபான்மை யினர் வாக்குகளைத் தக்க வைக்கச் சிரமப்படுகின்றனர். குடியுரிமையை தீர்மானிக்கும் வகையிலான அம்சங்கள் படிவத்தில் இருப்பதை எதிர்ப்பதாகவும், சட்டமன்றத் தேர்தல்க ளுக்குப் பிறகு கால அவ காசத்தோடு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. எதிர்வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், இப்தார் விழாக்களை அனைத்து மதத்தின ரும் பங்கேற்கும் வகையில் மக்கள் ஒற்றுமை விழாவாக நடத்தவும், உலகச்சிறுபான்மை உரிமை தினத்தில் கருத்தரங்குகளை நடத்தவும் தீர்மா னிக்கப்பட்டது.
