states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத்

2015ஆம் ஆண்டு முகமது அக்லக் என்ற முஸ்லீம் நபர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், மீதான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற உத்தரப்பிரதேச பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலையிட வேண்டும்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

மோடி அரசு சட்டத்தில் மாற்றம் செய்து தலைமை தேர்தல் ஆணையரை பாதுகாக்கிறது. தேர்தல் ஆணையமோ பாஜகவிற்கு ஆதரவான செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. இதன் விளைவாக, தேர்தல் நேரங்களில் ஒரு பக்கம் வாக்குகளைத் திருடும் பாஜக, மறுபக்கம் வாக்குக்கு ரூ.10,000 வரை வழங்கி வருகிறது.

ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா

தேர்தல் திருட்டிற்கு சாதகமாக உருவாக்கப்படும் வாக்காளர் பட்டியல், சமநிலை இல்லாத தேர்தல் களம் உள்ளிட்ட பல அம்சங்கள் தேர்தலை பாதிக்கின்றன. மேலும் தேர்தல் ஆணையத்தின் நற்பெயர் நாற்றமடிக்கும் வகையில் ஆபத்தில் உள்ளது. இது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் கம்பீரைப் போன்று ஒரு பயிற்சியாளரை நான் பார்த்ததே இல்லை. கம்பீர் தனக்கு பிடித்த வீரர்களை மட்டும் தேர்வு செய்கிறார். உண்மையான திறமையைப் புறக்கணித்துவிட்டு, தனிப்பட்ட விருப்பங்கள், வெறுப்புகள் மற்றும் கோபங்கள் அடிப்படையில் அணியைத் தேர்வு செய்வது சரியல்ல.