states

img

மோடி அரசுக்கு  ரயில் ஓட்டுநர்கள் சங்கம் கண்டனம் இண்டிகோ விவகாரத்தில் மோடி  

மோடி அரசுக்கு  ரயில் ஓட்டுநர்கள் சங்கம் கண்டனம் இண்டிகோ விவகாரத்தில் மோடி  

அரசின் நிலைப்பாடு குறித்து  அகில இந்திய லோகோ ரன்னிங்  ஸ்டாப் சங்கம் (AILRSA - ரயில் ஓட்டு நர்கள்) கடும் அதிருப்தியை வெளிப்  படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள அறிக்கையில், “விமானி களின் ஓய்வு நேரம் தொடர்பான விதிகள்  கொண்டு வரப்பட்டதால், இண்டிகோ நிறு வனம் முடங்கியது. இது கண்டித்தக்கது ஆகும். நாட்டில் அரசு அல்லது பொதுத்  துறை ஊழியர்கள் போராட்டம் நடத்  தும்போது, அவர்கள் மீது குற்றப்பத்தி ரிகை, இடைநீக்கம், ஒழுங்கு போன்ற நட வடிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படு கின்றன. பயணிகளின் வசதி அல்லது அத்தியாவசிய சரக்கு போக்குவரத்தின் அடிப்படையில் கடுமையான விதிகள் நியாயப்படுத்தப்படுகின்றன. ஆனால் பெரிய தனியார் நிறுவனங்கள் பாது காப்பு விதிகளை மீறும்போது கூட, அர சாங்கம் அவர்களுக்கு அடிபணிகிறது. இது முழு அமைப்பின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவித்தாலும் கூட தனி யார் நிறுவனங்கள் மீது அரசாங்கம் மென்மையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. விமானப் போக்குவரத்துத் துறையில் காணப்படும் பிரச்சனைகள் பல ஆண்டுகளாக ரயில்வே லோகோ பைலட்டுகள் எதிர்கொள்ளும் சூழ்நிலை யைப் போலவே உள்ளது. பல தசாப் தங்களாக, ரயில்வே ஊழியர்கள் அறி வியல், பாதுகாப்பான மற்றும் மனிதாபி மான வேலை முறைகளைக் கோரி வரு கின்றனர் என்பதை கவனித்தில் கொள்ள  வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.