states

img

“கொள்ளையடிக்கவே கட்சியை நடத்துகிறது பாஜக”

“கொள்ளையடிக்கவே கட்சியை நடத்துகிறது பாஜக”

பாஜக கொள்ளையடிக்கவே கட்சியை நடத்துகிறது என தேசியவாத காங்கிரஸ் (சரத்)  எம்எல்ஏ ரோகித் பவார் குற்றம்சாட்டி யுள்ளார்.  இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,”கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நாட்டில் ஆட்சியில் இருந்த போதிலும், 2004ஆம் ஆண்டில் காங்கிரஸ் தனது  கணக்கில் ரூ.38 கோடியை மட்டுமே வைத்  திருந்தது. ஆனால் பாஜக ரூ.88 கோடி யை வைத்திருந்தது. இன்று காங்கிரஸ் தனது கணக்கில் ரூ.133 கோடியை மட்டுமே வைத்திருக்கிறது. பாஜகவிடம் ரூ.10,107 கோடி மிகப்பெரிய அளவில் உள்ளது. காங்கிரஸால் ஒவ்வொரு மாவ ட்டத்திலும் அலுவலகங்களை அமைக்க  முடியவில்லை. ஆனால் வெறும் 12 ஆண்டுகளில், பாஜக ஒவ்வொரு மாவட்  டத்திலும் 5 நட்சத்திர அந்தஸ் துக்கு அலுவலகங்களை அமைத்துள்ளது.  இதன் மூலம் பாஜக கொள்ளையடிக்கவே கட்சியை நடத்துகிறது என்பது அம்ப லாகியுள்ளது” என்று ரோகித் பவார் குற்  றம்சாட்டியுள்ளார்.