திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சிவா (32). இவர், தனியார் நகைக்கடன் நிறுவன ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2-ஆம் தேதி சிவா பைக்கில் ஆரணி-போளூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்