பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தவர்களுக்கு சிபிஎம், சிஐடியு அஞ்சலி
சேலம், ஏப்.27- பஹல்காம் பகுதியில் பயங்கரவாதி களின் தாக்குதலின் உயிரிழந்தவர் களுக்கு, சிபிஎம், சிஐடியு-வினர் அஞ் சலி செலுத்தினர். காஷ்மீர், பஹல்காமில் பயங்கர வாதிகளின் தாக்குதலில் சுற்றுலாப் பய ணிகள் உட்பட 28 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நாட்டையே அதிர்ச் சிக்குள்ளாகியுள்ள இச்சம்பத்திற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரி வித்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந் தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தொழிற்சங்க மையம், ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத் தப்பட்டது. சேலத்தில் சிஐடியு சார்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு, சிஐ டியு மாவட்ட துணைச்செயலாளர் சி. கருப்பண்ணன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு நிர்வாகிகள் பி.கே.சிவ குமார், எம்.கே.மோகன், அரசு விரைவு போக்குவரத்து கிளை நிர்வாகிகள், புதுச்சாம்பள்ளி கட்சி கிளை நிர்வாகி கள், மேட்டூர் நகரக் கிளை நிர்வாகி கள், மாதர் சங்க நிர்வாகிகள் எஸ்.எம். தேவி, ராஜேஸ்வரி, தனம், மேட்டூர் அனல்மின் நிலைய கிளை செயலாளர் எஸ்.செந்தில் வேலன், கட்டிடத் தொழிலா ளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஆர்.கோவிந்தராஜ், திராவிடர் பண் பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் முல்லைவேந்தன், பாவேந்தர் அச்சகத் தின் பாரிசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, கட்சியின் சேலம் கிழக்கு மாநகரக்குழு சார்பில், மூணாங் கரடு, பாரதியார் தெரு, அருணாச்சல ஆசாரி ரோடு, களரம்பட்டி, ஆட்டோ ஸ்டாண்ட், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அஞ்சலி கூட்டம் நடைபெற் றது. சேலம் வடக்கு மாநகரத்திற்குட் பட்ட சாமிநாதபுரம் பகுதியில் நடை பெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு, வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் அ.குமார் பயங்கரவா தத்தை எதிர்த்து கண்டன உரையாற்றி னார். மேற்கு மாநகரக்குழு சார்பில் தபால் அலுவலகம் முன்பு, மாநகரச் செயலாளர் பி.கணேசன் தலைமையில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப் பட்டது. இதில் மாநகரக்குழு உறுப்பினர் கள், ஆட்டோத் தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பெத்தநாயக் கன்பாளையம், புத்திரகண்டபாளை யம், ஐஸ்வர்யா நகர் உள்ளிட்ட பகுதிக ளில், படுகொலை செய்யப்பட்டவர்க ளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈரோடு ஈரோடு தாலுகா, நசியனூர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு, சிபிஎம் தாலுகா செயலா ளர் என்.பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பா.லலிதா, இடைக்கமிட்டி உறுப்பினர் கள் உட்பட பலர் பங்கேற்றனர். பவானி யில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு, சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர்.பிர காஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிச் சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். மாணிக்கம், மூத்த நிர்வாகி ஏ.ஜெகநா தன், திமுக நகர துணைச் செயலாளர் ஜெயராமன், சிபிஐ நகரச் செயலாளர் பா.ம.பாலமுருகன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.கந்தசாமி, மதி முக ஒன்றியச் செயலாளர் சோ.வீரக் குமார், தமிழ் மாநில முஸ்லிம் முன் னேற்றக் கழக நகரச் செயலாளர் நசீர் ஆகியோர் பங்கேற்றனர். சோலாரில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிகங்கு மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராஜா தலைமை வகித்தார். தாலுகா செயலா ளர் எம்.பாலசுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப்பினர் பா.லலிதா உட்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் திருப்பூர் ரயில்வே குட்ஷெட் முன்பு, சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் சங் கத்தினர் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ராஜகோபால் தலைமை