tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க கோரிக்கை

உதகை, ஏப். 27- புளியம்பாறை கிராமத்தில் இருந்து ஆமைக்குளம் கல் லூரியை இணைக்கும் நாரங்காகடவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும். என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் ஆ.ராசா எம்.பி.,யிடம் மனு அளித்த னர். நீலகிரி மாவட்டம், புளியம்பாறை கிராமத்தில் இருந்து  ஆமைக்குளம் கல்லூரியை இணைக்கும் நாரங்காகடவு ஆற் றின் குறுக்கே, தமிழ்நாடு முதல்வர் கொடுத்த ஒப்புதலின் அடிப்படையில் பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புளியம்பாறை கிளை யின் சார்பாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவிடம்  சனியன்று மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட  ஆ.ராசா, உடனடியாக இதற்கான பணிகளை தொடங்கு வதற்கு ஆவண செய்யப்படும், என உறுதியளித்தார். இந்நிகழ்வில், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் இராசி இர விக்குமார், புளியம்பாறை கிளைச் செயலாளர் சுபைர், ஏரியா  கமிட்டி உறுப்பினர் ஹசைன், பழங்குடியின தலைவர் கோபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இறந்தவர்களை வயலில் இறங்கி கொண்டு செல்லும் அவலம்

பாலக்கோடு அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லா ததால், ஒத்தை அடி பாதையில் செல்ல முடியாததால், வய லில் இறங்கி இறந்தவர்களை எடுத்து செல்லும் அவல நிலை  ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள ஜோதி ஹள்ளி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து  வருகின்றனர். இவர்களின் உறவினர்கள் இறந்தால், மயானத் திற்கு எடுத்து செல்லும் பாதை ஒத்தை அடி பாதையாக உள் ளது. இதனால் வயல்வெளியில் இறங்கி சடலங்களை எடுத்து  செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மயானத்திற்கு செல்ல தனியாருக்கு சொந்தமான வயல்வெளியிலும், வரப்பின் வழியாகவும் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. பல்வேறு விஷ ஜந்துக்களின் நட மாட்டமும் அதிகமாக உள்ளன. இதனால், இறந்தவர் களை மயானத்திற்கு எடுத்து செல்லும் போது, விஷக்கடிக்கு  ஆளாக நேரிடுமோ என அச்சத்துடனே சென்று வருகின்ற னர். எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, மயானத் திற்கு செல்ல பாதை அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமான ஞாயிறன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஈரோடு மாவட்டம், கொடிவேரி தடுப்பணையில் குவித்தனர். அருவியில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க ஆண்கள், பெண்கள் தனி தனி பகுதியில் குளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.