வன விலங்களுக்கு உணவு வழங்கி வரும் தன்னார்வலர்கள்
நாமக்கல், ஏப்.27- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை யில் காணப்படும் வன விலங்குகளுக்கு 51 நாட்களாக தன்னார்வலர்கள் உணவு மற்றும் தண்ணீர் வழங்கி வருகின்ற னர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவில் உள்ளது. இந்த மலையில் குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு உயிரி னங்கள் காணப்படுகின்றன. கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மலை யில் ஆங்காங்கே உள்ள சுனைகளில் மட்டுமே சற்று தண்ணீர் இருந்து வரு கிறது. மழை பெய்தால் மட்டுமே சுனை கள் நிரம்பி, குரங்குகள் தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை இருக்காது. கடந்த பல நாட்களாக மழையின்றி கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஒவ்வொரு கோடையின் போதும், குரங்குகளுக் கும், சிறு விலங்குகளுக்கும் சமூக ஆர்வலர்கள் சிலர் ஒருங்கிணைந்து ஆங்காங்கே சிறு தண்ணீர் தொட்டி களை நிறுவி, தினசரி அடிவாரத்திலி ருந்து தண்ணீர் கொண்டு சென்று ஊற்றி, விலங்குகளின் தாகத்தை தணித்து வந்த னர். கடந்தாண்டு 100 நாட்கள் இவ்வாறு தண்ணீர் வழங்கியுள்ளனர். அதே போல் இந்த ஆண்டும் 50 நாட்களாக குடி நீர் வழங்கி வருவதாகவும் 51 வது நாளான ஞாயிறன்று சமூக ஆர்வலர் கள் தங்களால் முடிந்த அளவு அடிவாரத் தில் இருந்து இரு சக்கர வாகனங்க ளில் தண்ணீர் மற்றும் பழங்களை கொண்டு வந்து குரங்குகளுக்கு கொடுத்தனர். மேலும், பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்கவும், பழங்கள் தவிர வேறு உணவுகளை குரங்குகளுக்கு கொடுத்து பழக்காமல் இருக்கவும் தவிர்க்க முடியாமல் கொண்டு வரப்ப டும் பிளாஸ்டிக் பொருட்களை அற நிலையத்துறையினர் ஆங்காங்கே நிறு வியுள்ள குப்பை தொட்டிகளில் மட்டுமே போடுமாறு பொதுமக்களுக்கும், பக்தர் களுக்கும் வேண்டுகோள் விடுத்தனர். தன்னார்வலர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடையே மிகுந்த வர வேற்பு உள்ளது. பொதுமக்கள் தாமாக முன்வந்து பழங்களையும், தண்ணீரும் வழங்கி வருகின்றனர்.