சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் பாராட்டு விழா
புதுச்சேரி, ஏப்.27- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி களுக்கு பாராட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்ற புதுச்சேரி சட்டக்கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் பாராட்டு விழா, கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் சி.டி. ரமேஷ் விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார். விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகி யோர் கலந்துகொண்டு சிறப்பு விருந்தின ராக பங்கேற்ற நீதிபதிகள் ஆர்.சுப்பர மணியன், ஜி.ஆர்.சுவாமிநாதன்,டி.வி.தமிழ்ச்செல்வி,டி.பரதசக்கரவர்த்தி,ஆர்.கலைமதி,கே.கோவிந்தராஜன்திலகவதி ஆகியோரை பாராட்டி நினைவு கேட யங்களை வழங்கினார்கள். விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த், புதுச்சேரி பார் கவுன்சில் பொதுச்செயலாளர் நாராயணன் குமார் மற்றும் திரளான வழக்கறிஞர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.