tamilnadu

img

தலித் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்ட இடத்தை ஒப்படைக்கக் கோரிக்கை

தலித் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா  வழங்கப்பட்ட இடத்தை ஒப்படைக்கக் கோரிக்கை 

மிரட்டும் வருவாய் துறையினர் மீது நடவடிக்கை எடுத்திடுக

கள்ளக்குறிச்சி, ஏப்.27 - கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியம் பிரதிவி மங்கலம் ஊராட்சியில் ஆதிதிராவிட பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 900 வாக்காளர்கள் வசிக்கின்றனர்,  இந்த பகுதியில் 1991 இல் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின இதனையொட்டி பிரிதிவி மங்களம் எல்லையில் விருகாவூர் ரோட்டு அருகாமையில் திரு.வரதராஜ செட்டியார் மற்றும் பலராமன் ஆகியோரது 260/4D 4E 4F 258/ 5A ஆகிய சர்வே எண் உள்ள நிலங்களை,  ஆதிதிராவிட நலத்துறை மூலம் நில ஆர்ஜிதம் செய்து தலித்  மக்கள்  137 பேருக்கு 2001 ஆம் ஆண்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்தை அளந்து அத்துக்காட்டக்கோரி பல முயற்சிகள் செய்தும் பல ஆண்டுகளாக காலம் கடத்தி இழுத்தடித்து வந்தனர், ‘ இந்நிலையில் பட்டா கொடுத்த இடத்தை அளந்து அத்து காட்ட வேண்டும் என்று2024-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்றமும் பட்டா கொடுத்த இடத்தை உடனடியாக அளந்து அத்து காட்ட வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகு வருவாய்த் துறையினர் அளந்து அத்துக்காட்டி  கல்லு போட்டனர்.               எனவே அந்த பகுதியில் 10க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி குடியிருந்து வரு கின்றனர். மற்றவர்கள் அவரவர்கள் இடத்தில் வீடு கட்டத் துவங்கினர்.  இந்நிலையில் வருவாய் துறையினர் பட்டா கொடுத்த இடத்தை நாங்கள் ரத்து செய்து விட்டோம். நீங்கள் வீடு கட்டக்கூடாது. மீறி கட்டினால் உங்கள் மீது வழக்கு போட்டு சிறையில் தள்ளுவோம் என்று காவல் துறையை தூண்டிவிட்டு தலித் மக்களை வீடு கட்ட விடாமல் தடுக்கின்றனர்.  பாதிக்கப்பட்ட மக்களை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத்தலைவர் ஜி. ஆனந்தன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஏழுமலை, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.வி. ஸ்டாலின்மணி, வட்டச் செயலாளர் வி.ஏழுமலை, மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.அருள்தாஸ், டி.எஸ்.மோகன், அ.பா.பெரியசாமி, வி.சிவா, கே.கொளஞ்சி ஆகியோர் பார்வையிட்டு விசாரித்தனர்.