ஆட்சி அலுவலர் பணியிடங்களை உருவாக்கிடுக வேளாண்மைத்துறை பணியாளர்கள் உண்ணாநிலை
சென்னை, ஏப்.27- புதிய மாவட்டங்களில் ஆட்சி அலுவலர் பணியிடத்தை உருவாக்கக்கோரி, வெள்ளி யன்று வேளாண்மைத்துறை அமைச்சுப் பணி யாளர்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில செங்கல்பட்டு, கள்ளக் குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற் றும் மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் உருவாக் கப்பட்டுள்ளது. ஆனால், ஆட்சி அலுவலர் பணியிடம் உருவாக்கப்படவில்லை. எனவே, ஆட்சி அலுவலர் பணியிடத்தை உருவாக்க வேண்டும். தோட்டக்கலைத் துறையில் 17 மாவட்டங்களில் மட்டுமே ஆட்சி அலுவலர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களிலும் ஆட்சி அலுவலர் பணி யிடம் உருவாக்க வேண்டும். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங் களுக்கு அமைச்சுப் பணியிடம் வழங்க வேண் டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று, சென்னை, சேப்பாக்கத்தில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச் சுப் பணியாளர்கள் உண்ணாநிலை போராட் டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாநி லத் தலைவர் உ.சுமதி தலைமை வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர் இரா.பன்னீர் செல்வம் போராட்டத்தை தொடங்கி வைத் தார். கோரிக்கைகளை விளக்கி பொதுச்செய லாளர் கி.முத்துக்குமார் பேசினார். தலைமைச் செயலக சங்கத் தலைவர் வெங் கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் பொதுச்செயலாளர் மு.சீனிவாசன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.