tamilnadu

img

கடலூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட செயல்பாடு

கடலூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட செயல்பாடு

சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் ஆய்வு

கடலூர், ஏப்.27- நெல்லிக்குப்பம் பகுதி யில் தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடு குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ எம்.சின்னதுரை தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் தேசிய கிராமப்புற வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் செயல்பாடு வேலை அளிப்பு குறித்தும், ஊதியம் வழங்குவது குறித்தும், கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் தொடர்பான கோரிக்கைகள், குளறுபடிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முன் உள்ள பிரச்சனை கள் குறித்து விரிவாக சம்பந்தப்பட்ட மக்களி டம் விவரங்கள் சேகரிக்கப் பட்டது. நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்ற கள ஆய்வு பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பி னர் எம். சின்னதுரை தலை மையில் விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், மாவட்டப் பொருளாளர் டி.கிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர்  பழ.வாஞ்சி நாதன், சிபிஎம் பகுதிக்குழு செயலாளர் ஸ்டீபன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபாண்டியன், விதொச பகுதிக்குழு தலைவர் வெங்கடேசன், செயலாளர் சுந்தரபாண்டியன், பொருளாளர் ஆர்.வேலு சிபிஎம் கிளைச்  செயலாளர்கள் அருண் மொழி, விக்னேஷ், பிரேம் தாஸ், ரவிச்சந்திரன், முத்துக்குமரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிதம்பரம் சிதம்பரம் அருகே  சி தண்டேஸ்வரர் நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பரமேஸ்வரர் நல்லூர் கிராமத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலைத்திட்ட ஆய்வு மற்றும் சுய உதவி குழுக்கள் குறித்த கள ஆய்வு நடைபெற்றது. .  விவசாய தொழிலாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலை வரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கந்தர்வக்  கோட்டை தொகுதி எம்எல்  ஏவுமான சின்னதுரை பங்கேற்று  100 நாள் வேலைத்  திட்ட பயனாளிகளிடம் வரு டத்திற்கு எத்தனை நாள் வேலை வழங்கப்படுகிறது. சம்பளம் சரியாக வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். அது போல் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடு கள், நுன்கடன் உள்ளிட்ட வைகள் குறித்து  குறித்து 100-நாள்  வேலை யில் ஈடுபடும் தொழி லாளர்களிடம் கருத்துகளை கேட்டறிந்து ஆய்வு நடத்தி னார்.