தூத்துக்குடி, ஜூலை 23 தூத்துக்குடி அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாலிபரின் பைக்கை தீவைத்து எரித்தாக மர்ம நபர்கள் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே புதூர் நயினார் புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் மைக்கேல் ராஜ் (29), இவர் செவ்வாயன்று இரவு, தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்தியிருந்தாராம். நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர்கள் 2பேர் அந்த பைக்கிற்கு தீவைத்துள்ளனர். இதையடுத்து மைக்கேல்ராஜ் திடுக்கிட்டு எழுந்தபோது பைக் முழுமை யாக எரிந்து சேதமாகி விட்டதாம். அப்போது 2 மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதை அவர் பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.