இஸ்ரேலுடனான பொருளாதார உறவுகளை நிறுத்த வேண்டும்!
30 நாடுகளின் வெளியுறவு அமைச்சர் மாநாட்டில் வலியுறுத்தல்
இஸ்ரேலுக்கு ஆயுதம் ஏற்றிச்சென்ற கப்பலை தடுத்து நிறுத்திய கிரீஸ் தொழிலாளர்கள்!
பொகோட்டா, ஜூலை 16 - இஸ்ரேல் உடனான உறவுகளை ஒவ்வொரு நாடும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்; பொருளாதார உறவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என 30 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டில் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பனீஸ் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலின் இனப்படுகொலை க்குத் துணை போகும் பன்னாட்டு நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு இஸ்ரேலை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும் என அவர் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தார். இதனால் அவர் மீது அமெரிக்கா தடை விதித்தது. இஸ்ரேலின் படுகொலைக்கு எதிராக திட்டவட்டமான நடவடிக்கை இந்நிலையில், இனப்படுகொலை களை நிறுத்துவதற்காக 30 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு கொலம்பியா தலைநகரான பொகோட்டாவில் நடை பெற்றது. அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேலானது, காசாவிலும் ஆக்கிர மிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளிலும் நடத்தும் இனப்படுகொலை மற்றும் பிற குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ‘திட்டவட்ட மான நடவடிக்கைகளில்’ கவனம் செலுத்துவது தொடர்பாக இந்த மாநாடு கூட்டப்பட்டிருந்தது. ஹேக் கூட்டமைப்பின் உறுப்பினர் களான பொலிவியா, கியூபா, ஹோண்டுராஸ், மலேசியா, நமீபியா, செனகல், அல்ஜீரியா, வங்கதேசம், போட்ஸ்வானா, பிரேசில், சிலி, சீனா, ஜிபூட்டி, இந்தோனேசியா, ஈராக், அயர்லாந்து, லெபனான், லிபியா, மெக்ஸிகோ, நிகரகுவா, ஓமான், பாகிஸ்தான், பாலஸ்தீனம், கத்தார், செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், உருகுவே, வெனிசுலா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அமெரிக்க நட்பு நாடுகளும் உச்சி மாநாட்டில் பங்கேற்பு குறிப்பிடத்தக்க வகையில், நேட்டோ உறுப்பு நாடுகளும் அமெரிக்காவின் நட்பு நாடுகளுமான நார்வே, போர்ச்சுக்கல், ஸ்லோ வேனியா, ஸ்பெயின் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் இதில் கலந்து கொண்டன. இம்மாநாட்டில் உரையாற்றிய போதே, “இஸ்ரேல் உடனான உறவு களை ஒவ்வொரு நாடும் மறு பரிசீல னை செய்து பொருளாதார உறவு களை நிறுத்த வேண்டும்” என அல்பனீஸ் அழைப்பு விடுத்தார். அவர் மீது, அமெரிக்கா தடை விதித்த போதும், இரண்டு வார இடைவெளி யில் மீண்டும் இந்த அழைப்பை அவர் வெளியிட்டுள்ளார். முன்னணியில் தென் ஆப்பிரிக்கா- கொலம்பியா நாடுகள் இஸ்ரேலின் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரிகளை ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடு கொலம்பியா வாகும். ஆனால் கடந்த ஆண்டு அந்த ஏற்றுமதியை துண்டித்ததுடன் இஸ்ரே லுடனான உறவுகளையும் துண்டித்தது. மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேலின் மீது இனப்படுகொலை வழக்கு தொடர்ந்த தென் ஆப்பிரிக்காவுடன் தானும் அந்த வழக்கில் இணைந்து கொண்டது. இந்த இரு நாடுகளும் தான் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்கின. கொலம்பியாவின் துணை வெளி யுறவுத்துறை அமைச்சர் மௌரிசியோ ஜரமில்லோ ஜாசிர் மாநாட்டிற்கு முன் பாக பேசிய போது, “பாலஸ்தீனத்தில் நடைபெறும் இனப்படுகொலை ஒட்டுமொத்த சர்வதேச அமைப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இனவெறி மற்றும் இனப் படுகொலைகளை கண்டு கொலம்பியாவால் அலட்சிய மாக இருக்க முடியாது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் நாடுகள் இனப்படுகொலையை எதிர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதுடன், வெறும் வார்த்தைகளிலிருந்து கூட்டு நட வடிக்கைகளை நோக்கி செல்வ தற்கான திட்டவட்டமான வழிகளையும் வகுக்கும்,” என்றார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அவரது அமைச்சர வையில் இருந்த முன்னாள் பாது காப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோரை இனப்படு கொலை குற்றச்சாட்டில் கைது செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அந்த உத்தரவை செயல்படுத்துவதும் இந்த கூட்டு நடவடிக்கைகளில் அடங்கும்.
58 ஆயிரம் பாலஸ்தீனர்களை கொன்று குவித்த
கொடூர இஸ்ரேல் பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தகவலின்படி, அக்டோபர் 2023 முதல் இஸ்ரேல் ராணுவத்தால் 58,000 க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், உணவுப் பொருட்களை கொடுக்காமல் 23 லட்சம் பாலஸ்தீனர்களை பட்டினியில் தள்ளியுள்ளது இஸ்ரேல். இந்நிலையில் தான், ஒவ்வொரு நாடும் இஸ்ரேலுடனான பொருளாதாரம் உட்பட அனைத்துத் தொடர்புகளையும் உடனடியாக மறுபரிசீலனை செய்து நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு நாட்டில் உள்ள தனியார் துறையும் இந்த நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பனீஸ் வலியுறுத்தினார்.