tamilnadu

img

கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கு ஆக. 18 வரை இடைக்காலத் தடை!

கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கு ஆக. 18 வரை இடைக்காலத் தடை!

சிபிஎம் தொடர்ந்த வழக்கில் முதற்கட்ட வெற்றி

சென்னை, ஜூலை 17 - அரசியல் கட்சிகளின் கொடிக்கம் பங்களை அகற்றும் நடவடிக்கையை ஆகஸ்ட் 18 வரை நிறுத்தி வைத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள் ளார். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திவரும் சட்டப்போராட்டத் திற்கு முதற்கட்ட வெற்றியாக அமைந்துள்ளது. பொது இடங்களில் நிறுவப் பட்டுள்ள அரசியல் கட்சி கொடிக்கம்ப ங்களை அகற்றுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி.கே. இளந்திரையன், ஜூலை 24 வரை காலக்கெடு விதித்து  உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அரசியல் கட்சிகளின் கொடிக்  கம்பங்களை அகற்ற வேண்டுமென்ற  தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  மூன்று நீதிபதிகள் அமர்வுக்குப் பரிந்துரை அத்துடன், கொடிக்கம்பங்கள் அகற்றும் உத்தரவிலிருந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விலக்கு அளிக்கக் கோரியும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தலைமையிலான 2 நீதிபதிகள் அமர்வு, கொடிக்கம்பங்கள் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரித்து முடிவு செய்யும் வகையில் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். இவ்வாறு வழக்கு விசாரணையில் இருக்கும் போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடந்த ஜூலை 10 அன்று சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பி, அதில் ஜூலை 18-ஆம் தேதிக்குள் அனைத்து கொடிக்கம்ப ங்களையும் அகற்ற வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தார். கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவுக்கு எதிர்ப்பு எனவே, இது சட்டவிரோதமான உத்தரவு என்றும், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு வியாழக்கிழமை (17.07.2025) அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மீண்டும் இவ்வழக்கில் ஆகஸ்ட் 18-ஆம் தேதியன்று விசாரணை நடத்தப்படும் என்று கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அதுவரை அர சியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவதை கூடுதல் தலைமைச் செயலாளர் நிறுத்தி  வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இது கொடிக்கம்பங்கள் அகற்றும்  பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்தி வரும் தொடர் சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியாகும். இவ்வழக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், வழக்கறிஞர் திருமூர்த்தி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.