tamilnadu

img

கறம்பக்குடி வடக்கு ஒன்றியத்தில் ஒரே நாளில் தீக்கதிருக்கு 60 சந்தாக்கள்!

கறம்பக்குடி வடக்கு ஒன்றியத்தில்  ஒரே நாளில் தீக்கதிருக்கு 60 சந்தாக்கள்!

புதுக்கோட்டை, ஜூலை 16-  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றியத்தில், புதன்கிழமை யன்று ஒரே நாளில் தீக்கதிருக்கு 60 ஆண்டு சந்தாக்கள் சேர்க்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம். சின்னத்துரை தலைமையில் இந்த சந்தா சோர்ப்பு இயக்கம் நடைபெற்றது.  கட்சி அணியினர், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் நடைபெற்ற இச்சந்தா சேர்ப்பு இயக்கத்தில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ. ஸ்ரீதர், த. அன்பழகன், ஒன்றியச் செயலாளர் துரை. அரிபாஸ்கர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.