tamilnadu

img

ஏமாந்தது தமிழக மக்களல்ல; பாஜகவை நம்பிய பழனிசாமி தான்!

ஏமாந்தது தமிழக மக்களல்ல; பாஜகவை நம்பிய பழனிசாமி தான்!

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

மயிலாடுதுறை, ஜூலை 16 - மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய்க்காக ஏமாந்து விட்டதாக தமிழக மக்களை எடப்பாடி பழனிசாமி கொச்சைப் படுத்தியுள்ளார்; உண்மையில், தனது சுயநலத்திற்காகவும், தனது குடும்பத்தினரை ரெய்டிலி ருந்து காப்பாற்றுவதற்காகவும் எடப்பாடி பழனிசாமி தான் பாஜக-வை நம்பி ஏமாந்து போயி ருக்கிறார் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். மயிலாடுதுறையில் நடை பெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை பயனா ளிகளுக்கு வழங்கி முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை யாற்றினார். அப்போது முத லமைச்சர் பேசியதாவது: “தமிழக அரசின் திட்டத்தைப் பற்றி அவதூறு களைப் பரப்பத் தொடங்கி இருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமி. பழனிசாமி தன்னுடைய நான்காண்டு  ஆட்சியில் என்ன செய் தார்? இதே மயிலாடு துறையில், நாம் சிலை அமைத்திரு க்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரிலான ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்தை 2018-ஆம் ஆண்டோடு நிறுத்தியவர்தான் பழனிசாமி. மாணவர்களுக்கான லேப் டாப் திட்டத்தை நிறுத்தி யவரும் அவர்தான். அவர் எனக்கு டாட்டா - பை-பை சொல்கிறாராம். பத்து தோல்வி பழனிசாமி அவர்களே... 2019-ஆம் ஆண்டி லிருந்து தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக உங்களுக்கு டாட்டா - பை-பை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக குட்பை சொல்லப் போகிறார்கள். இனி மக்கள் ஒருபோதும் உங்களை நம்பப் போவதில்லை. அட… ஏன் உங்கள் கட்சிக்காரர்களே தேர்தல் களத்தில் உங்களை நம்பத் தயாராக இல்லை. ஒரு  திரைப்பட காமெடியில் வரும் - “அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா” அது போல அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். விரக்தியில் என்ன பேசு கிறோம் என்று தெரியாமல், தமிழ்நாட்டு மக்கள் மீதே குற்றச்சாட்டு வைக்கிறார். கொச்சைப்படுத்துகிறார்! ஆயி ரம் ரூபாய்க்காக ஏமாந்து விட்டீர்கள் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் தாய்மார்களைப் பார்த்து பேசுகிறார். மக்கள் ஏமாறவில்லை, உங்கள் சுய நலத்திற்காக, உங்கள் குடும்பத்தினரை ரெய்டிலிருந்து காப்பாற்றுவதற்காக பாஜக வை நம்பி நீங்கள்தான் ஏமாந்து போயிருக்கிறீர்கள்.  இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.