கடலூர் ரயில் விபத்து கேட் கீப்பர் பணி நீக்கம்!
சென்னை, ஜூலை 16 - கடலூரை அடுத்த செம்மங்குப்பம் ரயில்வே கிராசிங்கில் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற கோர விபத்தில், சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த திராவிட மணியின் மகள் சாருமதி (16), மகன் செழியன் (15), தொண்ட மாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விஜயசந்திரகுமார் மகன் நிமிலேஷ் (12) ஆகி யோர் இறந்தனர். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். தெற்கு ரயில்வே நியமித்த விசார ணைக் குழு 13 பேரிடம் விசார ணை நடத்தியது. விசாரணை யில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தொடர்ச்சியாக 3 நாட்கள் பணியில் இருந்த நிலையில் ரயில்கள் வரும் நேரங்களில் ரயில்வே கேட்டை முறை யாக அடைக்காமல் இருந்தது தெரியவந்தது. ரயில் நிலைய மேலாளரிடம் இருந்து ரகசிய குறியீட்டு எண் பெற்றிருந்த போதிலும் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனிடையே, விசார ணைக் குழுவின் அறிக்கை சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவல கத்தில் சமர்ப்பிக்கப் பட்டிருந்தது. அதில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணி நீக்கம் செய்ய விசாரணைக் குழு பரிந்துரை செய்திருந்தது. அதன்படி, பங்கஜ் சர்மா பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழகத்திற்கு 6 நாட்கள் மிக கனமழை எச்சரிக்கை!
சென்னை, ஜூலை 16 - தமிழ்நாட்டில் வியாழக்கிழமை (ஜூலை 17) முதல் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 18 அன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், ஜூலை 19, 20, 21 ஆகிய நாட்களில் தேனி மற்றும் தென்காசி மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.