திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் அனுமதி இன்றி விவசாய நிலத்தில் பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய் பதிப்பதற்கு நில அளவீடு செய்வதற்கு வந்த பாரத் பெட்ரோலிய கழக நிறுவனத்தின் ஊழியர்களை விவசாயிகள் சிறைபிடித்தனர்.பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐடிபிஎல் பெட்ரோல் கொண்டு செல்லும் பைப்லைன் திட்டம் கோவை இருகூர் முதல்கர்நாடகா தேவனகொத்தி வரை ரூ.678கோடி மதிப்பீட்டில் 294 கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது
ஊரில் பொது குடிநீர் குழாயை அடாவடியாக அடித்து உடைத்து சேதப்படுத்தியவரை தட்டிக்கேட்டவரை அரைநாள் முழுவதும் கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது