tamilnadu

பெட்ரோலியம் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு

சேலம், ஜூலை 1- விளை நிலத்தில் பெட்ரோலியம் குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, பார்வையிட வந்த அதிகாரிகளை திருப்பி அனுப்பினர். கோவை மாவட்டம் இருகூரில் இருந்து சேலம் வழியாக, கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை செல்லும் பெட்ரோலியம் குழாய் பதிக்கும் திட் டத்தை  பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தினர் செயல் படுத்தப்பட உள்ளனர். இதற்காக சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதி மட்டம்பட்டி பகுதியில் உள்ள செல்வமணி என்பவரின் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தனர். அப்போது, செல்வமணி உள்ளிட்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் எடப்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை.காவேரி ஆகியோர் அதிகாரிகளிடம் விவசாய நிலத்தை அள விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பின் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் விவசாய நிலத்தில் பெட்ரோலியம் குழாய் பதிக்க மாட்டோம் என்று உறுதியளித்து அங்கிருந்து சென் றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.