207 பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்
சிதம்பரம் அருகே ரூ. 16 கோடி மதிப்பீட்டில் 207 பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட பொன்னாங்கண்ணி மேடு, மதுரா, சி.தண்டேஸ்வர நல்லூர் உள்ளிட்ட கிராமத்தில் உள்ள 837 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருவது தில்லைநாயகபுரம் வாய்க்கால். இந்த இரண்டு பாசன வாய்க்கால்களையும் சேர்த்து 14.60 கி.மீ. நீளத்திற்கு ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரும் பணி நடைபெற்றது. இந்த பணியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் ரூ. 5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படும் தினசரி மார்க்கெட் கட்டிட பணி, வெளிவட்ட சாலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி, சுற்றுலா அலுவலகம் கட்டும் பணியை ஆய்வு மேற்கொண்டு பணி களை துரிதப்படுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு நடப்பாண்டு கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள 207 பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்களை ரூ. 16 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது”என்றார். போக்குவரத்து நெரிசல் குறையும் “சிதம்பர நகரத்தின் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இருபுற வெளிவட்ட சாலை அமைப்பதற்கு தில்லையம்மன் ஓடை பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணி ரூ. 35 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது என்றும் இந்த பணிகள் முடிவடைந்தால் சிதம்பர நகரத்திற்கு வந்து செல்லும் அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களும் இதில் வந்து செல்லும். இதனால் நகரின் முக்கிய வீதி களில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு வரும் அவசர ஊர்தி களும் கூட்ட நெரிசலில் மாட்டி கொள்ளாமல் எளிதில் மருத்துவ மனைக்கு வந்து செல்லும் என்றும் அமைச்சர் கூறினார். சர்வதேச பறவைகள் மையம் பிச்சாவரம் சுற்றுலா மையம் சர்வதேச பறவைகள் மையமாக மாற்றுவதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் அதை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். சிதம்பரம் பகுதியில் பிடிபடும் முதலையை கொண்டு முதலைப் பண்ணை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்தி உள்ள தாகவும் கூறினார். இந்த ஆய்வின்போது சிதம்பரம் வட்டாட்சியர் கீதா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், தமிழ்நாடு வடிகால் வாரிய செயற்பொறி யாளர் குமார் ராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலர் கண்ணன், நகராட்சி ஆணையர் மல்லிகா, நகராட்சி பொறியாளர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மது கடத்தியவர் கைது விழுப்புரம்,
ஏப். 6- புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வந்த வரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் மீனா தலைமையில் காவலர்கள் புதுச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலையில் தைலாபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் புதுச்சேரி மது பானங்கள் இருந்தது. தெரியவந்தது. இதை யடுத்து கார் ஓட்டுநரை கைது செய்து காவல் நிலை யம் அழைத்து வந்து விசா ரணை செய்தனர். விசா ரணையில் புதுச்சேரி மாநிலம் முத்தியால் பேட்டையை சேர்ந்த கவியரசன் (50) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் காரில் கடத்தி வந்த 48 மதுபான பாட்டில்கள், 110 லிட்டர் சாராயம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.