சென்னை,ஏப்.07- அடுத்த 36 மணி நேரத்தில் குறைந்த கற்றழுத்த தாழுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
தமிழ்நாட்டில் கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து கோடை மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவி வருவதால், அடுத்த 36 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மயம் தகவல் அளித்துள்ளது.