weather

img

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது!

சென்னை,ஏப்.08- குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது ஆனால் கடந்த சில நாட்களாகக் கோடை மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் சிறிதளவு வெப்பம் தணிந்துள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.