சென்னை,ஏப்.07- மீனவர்களுக்கான திட்டங்களை தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மீனவர்களுக்காக வலை பின்னுதல், படகு கட்டுமானத் தொழில், கருவாடு தயாரித்தல், படகு ஓட்டுநர் பயிற்சி ஆகிய தொழில்கள் செய்ய ரூ.54 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் 20,100 மீனவர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.