tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் நேரடி நியமனம்  கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர், ஏப். 6- கடலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், மாவட்ட திட்ட அலுவலகம் கடலூர் மாவட்ட திட்ட அலுவலகத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 222 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள், 3 குறு அங்கன்வாடி பணியிடங்கள் மற்றும் 243 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் பெண்களைக் கொண்டு மட்டுமே நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அங்கன்வாடி, குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தமிழ் சரளமாக எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும். இம் மாதம் 1 ஆம் தேதி நிலவரப்படி 25 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 25 வயது முதல் 38 வயது வரையும், விதவைகள், ஆதரவற்ற பெண்கள்,  எஸ்.சி/எஸ்.டி வகுப்பினர் 25 முதல் 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை  www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து இம்மாதம் 9 முதல் 25 வரை சம்பந்தப்பட்ட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டார, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணி நியமனத்தில் இருந்து ஓராண்டிற்குள் தொகுப்பூதியமாக மாதம் ஒன்றுக்கு பணியாளருக்கு ரூ. 7,700, குறு அங்கன்வாடி பணியாளருக்கு ரூ. 5,700 மற்றும் அங்கன்வாடி உதவியாளருக்கு ரூ. 4,100 வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வழிகாட்டல் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான “என் கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்  உரையாற்றினார்.

எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த எதிர்பார்ப்பு

கிருஷ்ணகிரி, ஏப்.6- கோடை வெயிலின் தாக்கத்தால், கிருஷ்ணகிரி அருகே படேதலாவ் ஏரி நீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது. எனவே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணேகொள்புதூரில் இருந்து கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நீரா தாரங்களாக கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை, பாம்பாறு அணை மற்றும் பாரூர் பெரிய ஏரி ஆகியவை உள்ளன. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள ஓசூர், சூளகிரி, கிருஷ்ணகிரி, காவேரிப்  பட்டணம், ஊத்தங்கரை ஆகிய ஒன்றி யங்களில், ஒரு பகுதியில் மட்டும் விவ சாயிகள் பயனடைந்து வருகின்றனர். ஆனால், வேப்பனஹள்ளி, பர்கூர், மத்தூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள விவ சாய நிலங்கள், எவ்விதத்திலும் பயன் பெறுவதில்லை. கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டி  நாயனப்பள்ளி ஊராட்சியில், சுமார் 269 ஏக்கர் பரப்பளவில் படேதலாவ் ஏரி(பெரிய ஏரி) அமைந்துள்ளது. மார்க்கண்டேய நதி யில் இருந்து கால்வாய் மூலம், இந்த ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதன் மூலம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளும், பர்கூர் ஒன்றியத்தில் 11 ஊராட்சிகளில் உள்ள 50ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. ஆனால் மார்க்கண்டேய நதி யில் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று விட்டதால், படேதலாவ் ஏரியும் வறண்டு விட்டது. தென்பெண்ணை ஆற்று உபரிநீரை படே தலாவ் ஏரிக்கு கொண்டு வரும் வகை யில், எண்ணேகொள் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப் பட்டது. எனவே, எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். அதே போல், மாரச்சந்திரம் தடுப்பணை முதல் படேதலாவ் ஏரி வரை அமைக்கப்பட்டுள்ள கால்வாயை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.