tamilnadu

img

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வுக்கூட்டம்

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வுக்கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை அலு வலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில்  நடைபெற்றது. திங்கட்கிழமை தோறும் மக்கள் தொடர்பு முகாம், நுகர்வோர் குறைதீர் முகாம், முன்னாள் ராணு வத்தினர்களுக்கான குறைதீர் முகாம், ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் முகாம், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம், விவசாயிகளுக்கான குறைதீர் முகாம் போன்றவற்றின் மூலம் பொதுமக்களிடமிருந்து ஏராளமான மனுக்கள் பெறப்படுகின்றன.  அவ்வாறு பல்வேறு முகாம்களில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைகளான ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாவட்ட சமூக நலத்துறை, வேளாண்மை துறை, குழந்தைகள் பாது காப்பு அலகு, இந்து சமய அறநிலையத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சுகா தாரத்துறை, கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பேரூராட்சி துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித்துறை, போக்கு வரத்துத்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.  துறை சார்ந்த அலுவலர்கள் பொது மக்களின் நலனை பாதுகாத்து மேம்படுத்த பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.