சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய சமுதாய கூடம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சமுதாயக்கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கமலா கண்ணப்பன் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக்கூடம் பல வருடங்களாக பயனற்று, தற்போது பன்றிகள் உலாவும் கூடாரமாகவும், சமூக விரோதி களின் கூடாரமாக விட்டது.மழைக்காலங்களில் இந்த கட்டிடம் அருகில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசு வதாகவும், இரவு நேரங்களில் மர்ம நபர்களின் கூடாரமாக மாறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.பெரிய அளவில் குற்றச் சம்பவம் நடப்பதற்கு முன்பு சமுதாயக்கூடத்தை சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.