கனமழையால் 12 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்
செஞ்சி விவசாயிகள் கவலை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் (மார்க்கெட் கமிட்டி) நவரை பருவம் நெல் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு தினமும் 7000 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்காக வருகிறது. செஞ்சி பகுதியில் கனமழை பெய்தது. இதில் செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வந்த 7 ஆயிரம் நெல் மூட்டை களும் மழையில் நனைந்து சேத மடைந்தது. மேலும் வியாபாரிகள் நெல் மூட்டைகளை வெளியே கொண்டு செல்லாமல் இருந்த 5000 நெல் மூட்டைகளும் நனைந்து சேதம் அடைந்தது. செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் மழையில் நெல் மூட்டைகள் நனைந்ததால் விவ சாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை தொழி லாளர்கள் எடை போடும் பணியில் மழையில் நனைந்து ஈடுபட்டு வருகின்றனர். திடீர் மழையால் செஞ்சி பகுதியில் தெருக்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. மார்க்கெட் கமிட்டியில் போதிய தண்ணீர் வெளியேற்றும் கால்வாய் அமைக்கப்படாததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்துள்ளது. செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் தினமும் வரும் நெல் மூட்டைகளை வியா பாரிகள் வெளியே கொண்டு செல்லாததாலும் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டை களை வெளியில் வைத்து எடை போடுவதாலும் ஏற்பட்ட இடநெருக்கடியாலும் நெல் மூட்டைகள் மழையில் சேதம் அடைந்து வருவதும் வாடிக்கை யாகி வருகிறது. எனவே வியாபாரிகள் ஏலம் எடுத்த நெல் மூட்டைகளை தினமும் வெளியே கொண்டு செல்ல மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் திடீர் மழையால் செஞ்சி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்களும் நனைந்து அறுவடை செய்ய முடி யாமல் சேதம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு போதிய இடவசதி இல்லாததால் விவ சாயிகள் தினமும் சிரமப்பட்டு வரு கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு போதிய இடவசதியும் நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாக்க குடோன் வசதியும் செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.