ஈரோட்டில் அஞ்சல் நிலைய எழுத்தராக பணியைத் துவக்கிய தோழர் என்.கோபால கிருஷ்ணன், சென்னை திருவல்லிக்கேணி தபால் நிலையத்தில் அஞ்சலக தலைவராக பணிசெய்த போது அஞ்சல்துறை ஊழியர்களைத் தொழிற்சங்கத்தின்பால் ஈர்க்க முக்கிய காரணமாக இருந்தார். தனது இறுதிக்காலம் வரை இடதுசாரி சிந்தனையாளராக இருந்து இயக்கப்பணியாற்றினார்.