tamilnadu

அரசு ஊழியர் குறித்து அரசின் 9 அறிவிப்புகளுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வரவேற்பு

அரசு ஊழியர் குறித்து அரசின் 9 அறிவிப்புகளுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வரவேற்பு

சென்னை, ஏப். 28 - அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர்  பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள 9 அறி விப்புகளை தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வரவேற்றுள்ளது. சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் முதல மைச்சர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். இதனை பல்வேறு அமைப்புகள் வரவேற்றுள்ளன. தலைமைச் செயலகச் சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடை முறைப்படுத்துவதற்கான குழுவின் அறிக்கையானது செப்டம்பர் 30க்குள் பெறப்படும் என்ற காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது வரவேற்கக்கூடியது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்தாலே போதும். குழு அமைக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், பழைய ஓய்வூதியம் திட்டம் குறித்த அறி விப்பினை 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முதலமைச்சர் வெளியிடுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மகப்பேறு விடுப்பு காலத்தினை பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களைப் பெற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பை முன்தேதியிட்டு வழங்க வேண்டும். அரசுப் பணியில் 69 இட ஒதுக்கீட்டினை உறுதி செய்யும் வகை யில், தனியார்மயம், ஒப்பந்தமயம், வெளி முகமைமயம் ஆகிய வற்றை முற்றாக ஒழித்து விட்டு, அனைத்து நிலைக் காலிப் பணியிடங்களையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் மூலமாக நிரப்ப வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.