tamilnadu

img

வின்சென்ட் லாக்கப் மரண வழக்கில் நீதிக்காகப் போராடியவர்களுக்கு சிபிஎம் பாராட்டு விழா

வின்சென்ட் லாக்கப் மரண வழக்கில் நீதிக்காகப் போராடியவர்களுக்கு சிபிஎம் பாராட்டு விழா

தூத்துக்குடி தாளமுத்து நகர் 

தூத்துக்குடி, ஏப்.28- தூத்துக்குடி தாளமுத்துநகர் வின்சென்ட் லாக்கப் மரண வழக்கில்  25 ஆண்டுகளாக நீதிக்காக போராடி யவர்கள், வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு அலுவலகத்தில் ஏப்ரல் 28 அன்று நடைபெற்றது .  லாக்கப் படுகொலை 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் மேல அலங்காரதட்டு பகுதியை சேர்ந்த உப்பளத் தொழிலாளி வின்சென்ட் என்பவரை சட்ட விரோதமாக தாள முத்துநகர் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.  அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவில் உதவி ஆய்வாளராக பணி செய்து  வந்த ராமகிருஷ்ணன் என்பவர் தலைமையிலான காவலர்கள் குழு  வின்சென்ட்டை காவல்நிலையத் தில் வைத்து இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.  அடுத்த நாள் செப்டம்பர் 18  அன்று வின்சென்ட் காவல் நிலை யத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். ஆனால் காவல்துறை தனது தந்திர புத்தியுடன் மாட்டு வண்டி பந்தயத்தின் போது கீழே விழுந்த தினால் இறந்து போனார் என்றும், சாராயம் குடித்ததினால் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து போனார் என்றும் கட்டுக்கதைகளை பரப்பினார்கள்.  தீரமிக்க போராட்டம் எனினும் கணவர் காவல்நிலை யத்தில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டதை நேரில் பார்த்த மனைவி கிருஷ்ணம்மாள். 1999 ஆம் ஆண்டு துவங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து நடத்திய தீரமிக்க சட்ட போராட்டத் தின் விளைவாக 25 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2025 ஏப்ரல் 5 அன்று  தூத்துக்குடி நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அதில், ஸ்ரீவைகுண்டம் துணை காவல்  கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன், ஒரு ஆய்வா ளர், ஒரு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு ஆயுள்  தண்டனை விதித்தும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கியது. அடிபணியாத கிருஷ்ணம்மாள் வழக்கு நடைபெற்ற இத்தனை காலமும் காவல்துறையின் அதி காரத்தை பயன்படுத்தி இந்த வழக்கி லிருந்து தப்பிக்க நினைத்தவர்களின் மிரட்டல், பண பேரம் என எந்த நிர்ப்பந்தத்திற்கும் அடிபணியாமல் இருந்த கிருஷ்ணம்மாள் மற்றும் குடும்பத்தின் கடைசி நம்பிக்கை யாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே இருந்தது. இந்த லாக்கப்  மரண வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிக்காக அயராது போராடி இவ்வழக்கில் ஆயுள் தண்டனை தீர்ப்பை பெற்றுத் தந்த வழக்கறிஞர்களின் தன்னலமற்ற பணியையும், கொண்ட கொள்கை யில் உறுதியாக நின்ற கிருஷ்ணம் மாள் மற்றும் இவ்வழக்கை நீர்த்துப் போகச் செய்ய வீசப்பட்ட அதிகார, சமுதாய, பணபலன்களுக்கு அடி பணியாமல் அன்றைக்கு களமாடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களையும், நீதிமன்றத்தில் நீதிக்காக போராடிய வழக்கறிஞர் களையும் பாராட்டும் விழா மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறு முகம் தலைமையில் நடைபெற்றது.  பாராட்டு மாநிலச்செயலாளர் பெ.சண் முகம், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப் பினர்கள் க.கனகராஜ், கே. அர்ச்சுணன், மாநிலக்குழு உறுப்பி னர் பி.பூமயில், மாநகர் செயலாளர் எம்.எஸ்.முத்து, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கே.எஸ். அர்ச்சுணன், ஆர்.ரசல், கு.ரவீந்தி ரன், இரா.பேச்சிமுத்து, எஸ்.அப்பா துரை, தா.ராஜா, த.சண்முகராஜ், பா.புவிராஜ், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உயர்நீதிமன்ற  மதுரை கிளை வழக்கறிஞர்கள் எல்.ஷாஜி செல்லன், டி.சீனிவாசராகவன், தூத்துக்குடி வழக்கறிஞர் இ.சுப்பு முத்துராமலிங்கம், வின்சென்ட் மனைவி கிருஷ்ணம்மாள், சிபிஎம் மூத்த தோழர் இசக்கி முத்து, உப்புத் தொழிலாளர் சங்க நிர்வாகி பொன் ராஜ்,  தூத்துக்குடி ஒன்றிய செயலா ளர் கே.சங்கரன், சிபிஎம் உறுப்பி னர்  முத்து சிப்பி தாமோதரன் மற்றும் வின்சென்ட் குடும்பத்தினர் மற்றும் நீதிக்காக போராட்டத்தில் களமாடிய தோழர்கள் பாராட்டப் பட்டனர்.   நிகழ்வில் கலந்துகொண்ட மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசுகை யில், “காவல்துறையினரால் நடத்தப் படும் லாக்கப் மரணங்களுக்கு எதிராக, எப்போதும் நீதிக்கான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே நின்று வரு கிறது.  தமிழகத்தில் பல்வேறு லாக்கப் மரணங்களில் பாதிக்கப் பட்ட குடும்பத்தினருக்கு உறு துணையாக இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இந்த வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் அதிகாரத்திற்கு அடி பணியாமல் தொடர்ந்து நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணம் மாள் மற்றும் அவரது குடும்பத்தின ரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் மனதார பாராட்டுகிறேன். மக்களுக்கான போராட்டத்தில் ஈடுபடும் மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்களையும் அவர்களுக்கு நீதி கிடைக்க நீதிமன்றத்தில் போராடும் வழக்கறிஞர்களையும் மனதார பாராட்டுகிறேன்” என்று தெரி வித்தார்.           (ந.நி.)